இந்திய மக்களின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் "டாடா அறக்கட்டளை".




டாடா குழுமத்தின் முதன்மை முதலீட்டு நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் சொத்துக்களில் 66 % பங்குகள் டாடா அறக்கட்டளைக்கு சொந்தமானது என டாடா குழுமம் தெரிவிக்கிறது. டாடா அறக்கட்டளை ஒவ்வொரு ஆண்டும் மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு அளித்த நன்கொடைகளை நிதி அறிக்கையாக வெளியிடுகிறது. அதன்படி 2022-2023 ஆம் நிதியாண்டில் 456.42 கோடி ரூபாய் மற்றும் 2021-2022 ஆம் நிதியாண்டில் 860.46 கோடி ரூபாய் மருத்துவம், கல்வி, கிராமப்புற மேம்பாட்டு என பல்வேறு நலத்திட்டங்களை மேம்படுத்துவதற்காக செலவிடப்பட்டுள்ளது.  

அறக்கட்டடளையின் தொடக்கம்:
    இன்றயை டாடா குழுமம் 1874 ல்  'எம்பிரஸ் மில்' என்ற ஜவுளி உற்பத்தி ஆலையை ஆரம்பமாக வைத்து திரு.ஜாம்செட்ஜி டாடா அவர்களால் நிறுவப்பட்டது. டாடா நிறுவனம் தொடக்கத்தில் இருந்தே, தன் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் நலனில் பெரிதும் கவனம் செலுத்தி வந்தது. குறிப்பாக தனது ஊழியர்களுக்கு தொழிற்பயிற்சி அளித்தல், சிறப்பாக சேவை புரியும் ஊழியர்களுக்கு பணி உயர்வு, தொழிலாளியின் குழந்தைகளுக்கு முதன்மை கல்வி வகுப்புகள், மருத்துவ காப்பீடு, ஓய்வூதிய நிதி, மகப்பேறு உதவித்தொகை, வருங்கால வைப்பு நிதி என பல்வேறு சிறப்பம்சங்களை ஜாம்செட்ஜி டாடா அறிமுகப்படுத்தினார். டாடா நிறுவனத்தை ஒரு மாபெரும் வளர்ச்சிப் பாதைக்கு ஜாம்செட்ஜி  டாடா  கொண்டு சென்றார். பின்னர்  ஜாம்செட்ஜி டாடா அவர்கள் கஷ்டப்பட்டு தன்னுடைய வாழ்நாளில் சேர்த்த செல்வத்தில் ஒரு பகுதியை இந்திய ஏழை மாணவர்கள் மேலை நாடுகளில் மேற்படிப்பு படிக்க கல்வி உதவித்தொகையாக வழங்கினார். ஜாம்செட்ஜி டாடா அவர்களின் இத்தகைய கொடைப்பண்பு இந்திய மக்களிடையே பெரும் நன்மதிப்பை பெற்றது. டாடா நிறுவனம் தொடர்ந்து லாப நோக்கத்தோடு செயல்படாமல், மக்களுக்கு சிறப்பான சேவை வழங்க வேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்பட துவங்கியது. அதன் பிரதிபலிப்பாக இந்திய மக்களின் மனங்களில் டாடா நிறுவனம் நீங்காத இடத்தை பிடித்துவிட்டது.

ஜாம்செட்ஜி டாடா அவர்களின் கொடைப்பண்பு, பிற்காலத்தில் ஒரு அறக்கட்டளை அமைப்பு உருவாக அடித்தளமானது. டாடா நிறுவனத்தின் முதல் அறக்கட்டளை 1892 ஆம் ஆண்டில் 'JN Tata Endowment' என்ற பெயரில் ஜாம்செட்ஜி டாடா அவர்களால் தொடங்கப்பட்டது. இந்திய மாணவர்களின் உயர்கல்வி மற்றும் அறிவியல் ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்க்காக இந்த அறக்கட்டளை சிறப்பாக செயல்பட்டது. அதன் தொடர்ச்சியாக 1911 ஆம் ஆண்டில் இந்திய அரசு மற்றும் மைசூர் அரசோடு இணைந்து டாடாவின் கூட்டு முயற்சியால் 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ்'  பல்கலைக்கழகம் பெங்களூருவில் அமைக்கப்பட்டது.

டாடா அறக்கட்டளையானது ஜாம்செட்ஜி டாடாவின் வாரிசுகளான Sir Ratan Tata மற்றும் Sir Dorabji Tata  பெயரில் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை,

Sir Ratan Tata Trust &Allied Trusts
  • 1919   -  Sir Ratan Tata Trust
  • 1923   -  Bai Hirabai  J.N.Tata Navsari Charitable Institution
  • 1974   -  Navajbai Ratan Tata Trust
  • 1975   -  Sarvajanik Seva Trust
  • 2008   -  Tata Education and Development Trust 
Sir Dorabji Tata Trust &Allied Trusts
  • 1892   -  The JN Endowment for the Higher Education of Indians
  • 1932   -  Sir Dorabji Tata Trust
  • 1932   -  Lady Meherbai D Tata Education Trust
  • 1932   -  Lady Tata Memorial Trust  
  • 1944   -  JRD  Tata Trust
  • 1974   -  Jamsetji Tata Trust
  • 1990   -  Tata Education Trust, Tata Social Welfare Trust and RD Tata Trust
  • 1991   -  JRD and Thelma J  Tata Trust 
டாடா குழுமத்தால் மொத்தம் 15 அறக்கட்டளைகள் செயல்படுத்தப்படுகின்றன. இதில் பெரும்பான்மையான அறக்கட்டளைகள் கல்வி, மருத்துவம், கிராமப்புற மேம்பாடு & அறிவியல் மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காக இயங்குகின்றன. மற்றவை  சுகாதாரம், பொருளாதார வளர்ச்சி, பெண்களின் முன்னேற்றம், வாழ்வாதாரம், டிஜிட்டல் மாற்றம், இடம்பெயர்வு மற்றும் நகர்ப்புற வாழ்விடம், சமூக நீதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, திறன் மேம்பாட்டு பயிற்சி, விளையாட்டு, கலை மற்றும் கலாச்சாரத்தை பாதுகாப்பது, பேரிடர் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளித்தல், தனிப்பட்ட நபர்களுக்கு மருத்துவ மற்றும் கல்வி ஆதரவு என பல்வேறு கோணங்களில் டாடா அறக்கட்டளையானது நாட்டு மக்களின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பில் மிகுந்த அக்கறையுடன் உதவி வருகிறது.

தலைமைப் பொறுப்பு
    டாடா அறக்கட்டளையை  நிறுவிய  ஜாம்செட்ஜி டாடா  துவக்க காலத்தில் அதனை நிர்வகித்து வந்தார். 1904 ல் ஜாம்செட்ஜி டாடா அவர்களின் மறைவிற்கு பிறகு அவரது வாரிசுகளான சர் ரத்தன் டாடா மற்றும் சர் டோராபிஜி டாடா அவர்கள் அறக்கட்டளையை நிர்வகித்தனர். இவர்களது காலத்தில் மேலும் பல புதிய அறக்கட்டளைகள் தொடங்கப்பட்டன. அதன்பின் லேடி நவாஜிபாய் ரத்தன் டாடா, JRD டாடா & ரத்தன் N.டாடா என பலர் தலைமைப் பொறுப்பில் இருந்து டாடா அறக்கட்டளையை சிறப்பாக நிர்வகித்து வந்தனர். October 9, 2024 அன்று ரத்தன் டாடா அவர்கள் காலமானார். ரத்தன் டாடா மறைவிற்கு பிறகு, டாடா அறக்கட்டளையின் தலைவராக  திரு.நோயல் டாடா  அவர்களும், துணைத்தலைவர்களாக திரு. வேணு சீனிவாசன் மற்றும் திரு.விஜய் சிங் ஆகியோரும்  தற்போது  நிர்வாகப் பொறுப்பில் உள்ளனர்.

Comments