இந்திய மக்களின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் "டாடா அறக்கட்டளை".
டாடா குழுமத்தின் முதன்மை முதலீட்டு நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் சொத்துக்களில் 66 % பங்குகள் டாடா அறக்கட்டளைக்கு சொந்தமானது என டாடா குழுமம் தெரிவிக்கிறது. டாடா அறக்கட்டளை ஒவ்வொரு ஆண்டும் மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு அளித்த நன்கொடைகளை நிதி அறிக்கையாக வெளியிடுகிறது. அதன்படி 2022-2023 ஆம் நிதியாண்டில் 456.42 கோடி ரூபாய் மற்றும் 2021-2022 ஆம் நிதியாண்டில் 860.46 கோடி ரூபாய் மருத்துவம், கல்வி, கிராமப்புற மேம்பாட்டு என பல்வேறு நலத்திட்டங்களை மேம்படுத்துவதற்காக செலவிடப்பட்டுள்ளது. அறக்கட்டடளையின் தொடக்கம்: இன்றயை டாடா குழுமம் 1874 ல் 'எம்பிரஸ் மில்' என்ற ஜவுளி உற்பத்தி ஆலையை ஆரம்பமாக வைத்து திரு.ஜாம்செட்ஜி டாடா அவர்களால் நிறுவப்பட்டது. டாடா நிறுவனம் தொடக்கத்தில் இருந்தே, தன் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் நலனில் பெரிதும் கவனம் செலுத்தி வந்தது. குறிப்பாக தனது ஊழியர்களுக்கு தொழிற்பயிற்சி அளித்தல், சிறப்பாக சேவை புரியும் ஊழியர்களுக்கு பணி உயர்வு, தொழிலாளியின் குழந்தைகளுக்கு முதன்மை கல்வி வகுப்புகள், மருத்துவ காப்பீடு, ஓய்வூதிய நிதி, மகப்பேறு உதவி...